
மீண்டும் ஜோடி சேரும் பிரபாஸ் – அனுஷ்கா
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடி சேர்ந்து நடித்த பிரபாஸ், அனுஷ்கா ஆகிய இருவரும் அதன் பிறகு காதல் , திருமணம் குறித்த வதந்திகளில் சிக்கினார்கள். இந்த நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க போகிறார் பிரபாஸ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ராதே ஷ்யாம் படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு ஆதிபுருஷ், சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே படம் என மூன்று படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது .