சென்னை:
முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
துபாய் பயணம் தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டிக்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலையிடம் ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் அவர் சென்னை கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் தான் உள்ளன. ரூ.610 கோடி அல்ல. முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். அடுத்த 6 மணி நேரம் கட்சி அலுவலகத்தில் தான் இருப்பேன். முடிந்தால் கைது செய்யுங்கள்.
என்னை கைது செய்யாவிட்டால் நீங்கள் தான் மக்களிடம் மாட்டிக்கொள்வீர்கள். தொட்டாம்பட்டியில் இருந்து வந்த என்னை தொட்டுப்பார்க்கட்டும்.