உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப் பெறப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
சோவியத் யூனியனில் இருந்து,
உக்ரைன்
தனி நாடாக பிரிந்ததில் இருந்தே, அந்நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள மக்களின் பழக்க வழக்கம், மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை ரஷ்யாவுடன் ஒத்து போவதால், அந்நாட்டை, தங்களது நாடாகவே,
ரஷ்யா
கருதி வருகிறது.
இந்த பிரச்னை ஒரு புறம் இருக்க,
அமெரிக்கா
, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க, ரஷ்யப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, கடந்த சில வாரங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகள் நீக்கம் – அமெரிக்கா அதிரடி!
தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான், மரியுபோல் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யப் படைகளால் கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற முடியவில்லை. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 30 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று, துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில், உக்ரைன் – ரஷ்யா அதிகாரிகள் பங்கேற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு உள்ளது. இதன்படி, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள ரஷ்யப் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
9 நாட்கள் முழு ஊரடங்கு – அரசு உத்தரவால் பொது மக்கள் ஷாக்!
தலைமைப் பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறியதாவது:
பேச்சுவார்த்தையில் அர்த்தமுள்ள விவாதம் நடந்தது. உக்ரைன் நாட்டின் பரிந்துரைகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் எடுத்துரைக்கப்படும். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை, ரஷ்ய அதிபர் புடின் சந்திக்கலாம். ஒப்பந்தத்தின் மீது விரைவான வேலை மற்றும் தேவையான சமரசத்தைக் கண்டறிவதற்கான நிபந்தனையின் அடிப்படையில், சமாதானத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகவும் நெருக்கமாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த செய்திஆண், பெண் இனிமே இங்க ஒண்ணா போகக்கூடாது… தாலிச்சு எடுக்கும் தலிபான்கள்!