முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கை மார்ச் 31-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
“அதன் சிக்கல்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் அவகாசம் அளிக்கலாம்” என்று தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே கோரிக்கை விடுத்ததையடுத்து, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரிப்பதாகக் கூறியது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீதான வாதங்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தமிழக அரசின் வழக்கறிஞர், தொடக்கத்தில், நீதிபதிகள் ஏஎஸ் ஓகா, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
“நாங்கள் சில உரையாடல்களை நடத்தியுள்ளோம், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
கேரளா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, தமிழகம் தங்களுக்கு ஏதோ ஒன்றை கொடுத்துள்ளதாகவும், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
“அவர்கள் எங்களுக்கு எதையோ கொடுத்திருக்கிறார்கள். அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். அவர்களுக்கும் நாங்கள் பதில் கொடுப்போம். அது நாங்கள் நினைத்ததைவிட இது சிறிது நேரம் எடுக்கும்” என்று குப்தா கூறினார்.
“பிரச்னை ஒன்றும் இல்லை” என்று கூறிய நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை மார்ச் 31-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்தது.
126 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்புப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை, கண்காணிப்புக் குழு மூலம் தீர்க்கலாம் என்று தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு மார்ச் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
தற்போதுள்ள அணையின் கீழ்பகுதியில் புதிய அணை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கூறிய கேரளா எழுப்பிய பிரச்னையை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மேற்பார்வைக் குழுவால் விவாதித்து, தீர்வு காண முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த விவகாரம் இரு மாநிலங்களையும் பாதிக்கிறது என்றும் இருதரப்பு நலனும் பாதுகாக்கப்படுவதற்கும் இரு மாநிலங்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.
கேரளா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தற்போதுள்ள அணையின் கீழ்பகுதியில் புதிய அணை கட்டும் பணி தொடங்க வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணையின் மேல்நிலை நீர் மட்டம் 142 அடியாக இருக்கக்கூடாது என்றும் 140 அடியாக இருக்க வேண்டும் என்றும் கடந்த வாரம் உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு தெரிவித்திருந்தார்.
எவ்வளவு உறுதிப்படுத்தினாலும் அணையை நிலைநிறுத்த முடியாது என்றும், பராமரிப்பு மற்றும் பலப்படுத்துதல் நடவடிக்கைகளின் மூலம் அணைகளை எத்தனை ஆண்டுகள் பயன்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதற்கு வரம்பு உள்ளது என்றும் கேரள அரசு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
கேரளாவால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்திற்கு பதிலளித்த தமிழக அரசு, கேரளா மீண்டும் வலியுறுத்திய மற்றும் அவ்வப்போது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் மனுதாரர்கள் ஏற்கனவே உள்ள அணையை அகற்றிவிட்டு புதிய அணையைக் கட்ட முயல்வதாகக் கூறியது. அணையின் பாதுகாப்பு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வெளிச்சத்தில் இது முற்றிலும் அனுமதிக்க முடியாதது என்று கூறியது.
“அணை நீரியல் ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் மற்றும் நில அதிர்வு ரீதியாகவும் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு அரசு கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“