மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில் ரகசியமாக சேவல் சண்டை நடந்த இடத்தில் ஒரு தரப்பினர் மீது மற்றொரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மைக்கோகன் மாகாண சுற்றுப் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவினர் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தரப்பினர் ரகசியமாக சேவல் சண்டை நடத்தி உள்ளனர்.
அப்போது அடையாளம் தெரியாத வகையில் உடை அணிந்த ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. அவர்கள் சேவல் சண்டை நடத்திய தரப்பினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பெண்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்; 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது திட்டமிட்டு நடந்த படுகொலை என கூறிய போலீசார் இதற்கு காரணமானவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோ சிட்டி:மெக்சிகோவில் ரகசியமாக சேவல் சண்டை நடந்த இடத்தில் ஒரு தரப்பினர் மீது மற்றொரு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.வட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.