பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஐடிபிஐ வங்கி, ஏற்கனவே முதலீடுகளை திரட்டி வந்தது, இந்த நிலையில் தற்போது 2022 – 2023ம் நிதியாண்டில் 28,000 கோடி ரூபாய் கடன் பத்திரம் மூலம் நிதியினை திரட்ட இவ்வங்கியின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக ரூபாய் கடன் பத்திர வரம்பினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் AT-1 பத்திரங்கள் 23,000 கோடி ரூபாய் வரையிலும் மற்றும் மூத்த/உள்கட்டமைப்பு பத்திரங்கள் மூலம் 21,000 கோடி ரூபாய் வரையில் 2023ம் நிதியாண்டில் நிதி திரட்டலாம் என கடன் வழங்குனர் என முன்னதாக பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுவும் போச்சா வெளங்கிடும், இந்த முறையும் நட்டம் பார்த்த ஐடிபிஐ
இன்றைய பங்கு நிலவரம்?
ஐடிபிஐ வங்கி லிமிடெட்-ன் பங்கு விலை என்.எஸ்.இ-யில் 3.39% குறைந்து, 42.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 44.70 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 41.50 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் பங்கு விலை 3.05% குறைந்து, 42.85 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 44.65 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 41.90 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 65.25 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலையாகும்.
என்னென்ன சேவை
எல் ஐ சி கட்டுப்பாட்டில் உள்ள இவ்வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கிக் கணக்கு முதல் சில்லறை மற்றும் எம்.எஸ்.எம்.இ வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் அல்லது விவசாயிகளுக்கு விவசாய கடன் உள்ளிட்ட பல சேவைகளையும் வழங்கி வருகின்றது.
நிகரலாபம்
கடந்த டிசம்பர் காலாண்டில் இவ்வங்கியின் நிகரலாபம் 53% அதிகரித்துள்ளது. இவ்வங்கியின் கடன் வளர்ச்சியானது அதிகரித்துள்ள நிலையில், நிகர வட்டி வருவாய் மற்றும் நிகர வட்டி வரம்பு இரண்டையும் அதிகரிக்க உதவியது. கடந்த காலாண்டில் 578 கோடி ரூபாயாக இருந்த லாபம், முந்தைய ஆண்டில் 378 கோடி ரூபாயாக இருந்தது.
என்ன வித்தியாசம்
நிகர வட்டி வருமானம் அல்லது கடனுக்கான வட்டிக்கும், டெபாசிட்டுகளுக்கு செலுத்தப்படும் இடையே உள்ள வித்தியாசம் 31% அதிகரித்து, 2,383 கோடி ரூபாயாகஅதிகரித்துள்ளது.
IDBI bank approves rupee bond borrowing limit of Rs.28,000 crore
IDBI bank approves rupee bond borrowing limit of Rs.28,000 crore/ரூ.28,000 கோடி நிதி திரட்ட திட்டம்.. ஐடிபியின் மெகா திட்டம் தான்..!