வாட்ஸ் அப் செயலியில் 2 ஜிபி அளவுள்ள கோப்புகளை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் எழுத்துக்கள் வடிவிலும், வீடியோ, ஆடியோ வடிவிலும் உரையாடல்கள் நடைபெறும் நிலையில், குறைந்த அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்பும் வசதி உள்ளது.
மேலும், இந்த புதிய வசதியினை முதற்கட்டமாக அர்ஜென்டினாவில் அறிமுகப்படுத்தி பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.