ஐடி பங்குகள் சமீபத்திய ஆண்டுகளாகவே நல்ல லாபம் கொடுக்க கூடிய பங்குகளாக உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு ஹைத்ராபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்லா சொல்யூஷன்ஸ் பற்றி தான்.
இந்த பங்கின் விலையானது கடந்த 8 ஆண்டுகளில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு லாபம் கொடுத்துள்ளது.
இந்த பங்கின் விலையானது கடந்த மார்ச் 28,2014 அன்று 4.31 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, மார்ச் 28, 2022ல் 1321.30 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 30556% ஏற்றமாகும்.
புதிய உச்சத்தை எட்டிய ஜுன்ஜுன்வாலா பங்கு.. முதலீட்டாளர்களின் பணம் 2 மடங்காக அதிகரிப்பு..!
பல கோடி லாபம்
இப்பங்கின் நீங்கள் 2014ம் ஆண்டில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கும் மேலாக அதிகரித்திருக்கும். மொத்தத்தில் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றிய ஒரு மல்டி பேக்கர் எனலாம். எனினும் இந்த கோடீஸ்வர யோகம் எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது என்றால் அது மிகப்பெரிய கேள்வி தான். ஏனெனில் 8 ஆண்டுகள் இப்பங்கில் முதலீடு செய்து காத்திருந்தவர்களுக்கு மட்டுமே இந்த லாபம்.
இனியும் ஏற்றம் காணலாம்
இதுவரை லாபம் கொடுத்துள்ள பங்காக மட்டும் அல்ல, இனியும் இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், இந்த நிறுவனம் தொடர்ந்து புதிய பல வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இது மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இது இப்பங்கின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
லாபம் எப்படி?
மார்ச் 31, 2021வுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 356.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் 209.48 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் விற்பனையும் முந்தைய ஆண்டினை காட்டிலும் 20% அதிகரித்து 2341.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமானது பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
என்ன செய்கிறது?
தன்லா நிறுவனம் முன்னணி கம்யூனிகேஷன் வழங்குனராகும். இது நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. இது கிளவுட் அடிப்படையிலான இணைப்பினை எளிதாக்குகின்றது. இந்த நிறுவனம் சிங்கப்பூர், லண்டன், கொலம்பியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் சேவையினை வழங்கி வருகின்றது.
இலக்கு
பொனான்ஷா போர்ட்போலியோவின் ரிசர்ச் தலைவரான விஷால் வாக், இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம். இதன் இலக்கு விலை 1907 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளார். இது இந்த நிறுவனத்தின் cagr விகிதம் 27.5% அதிகரிக்கலாம் என CPaaS கணிப்பினை (பிசினஸ் டுடே) சுட்டிக் காட்டியுள்ளார்.
30,500% return in 8 years! Experts expect up to 60% upside in this multibagger
30,500% return in 8 years! Experts expect up to 60% upside in this multibagger/30,500% லாபம்.. அள்ளிக் கொடுத்த ஐடி பங்கு.. இன்னும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் செம கணிப்பு!