இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒருவரை
உக்ரைன் துருப்புகள் சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் ஸ்னைப்பர் உக்ரைன் துருப்புகளின் தாக்குதலில் காயம்பட்டதாகவும்,
ஆனால் அவருடன் காணப்பட்ட ரஷ்ய வீரர்கள், அவரை மீட்காமல் தப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Irina Starikova என்ற செர்பியா நாட்டவரான அந்த பெண் ஸ்னைப்பர் 2014 முதல்
உக்ரைன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
கனவனை பிரிந்து தமது பெண் பிள்ளைகள்
இருவருடன் தனியாக வசித்து வந்துள்ள Irina Starikova உக்ரேனிய பொதுமக்கள் மற்றும் இராணுவ
அதிகாரிகள் உட்பட மொத்தம் 40 பேர்களை இதுவரை கொன்றுள்ளார்.
இந்த நிலையில், படுகாயமடைந்து சாவின் விளிம்பில் அவரை உக்ரைன் துருப்புகள் மீட்டுள்ளது.
மேலும்
அவருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டதாகவும்,
அவரை சிறைபிடித்துள்ள தகவலை உக்ரைன் துருப்புகள் உறுதி செய்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளதாகவும்
உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஸ்டாரிகோவா கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் பிரிவினைவாதப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு
வந்துள்ளார். கடந்த 2014 முதல் ரஷ்யாவின் உதவியுடன் உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
ரஷ்யாவை பொறுத்தமட்டில், சோவித் ஒன்றியமாக இருந்த காலகட்டத்திலேயே
பெண்களை போர்க்களத்தில் துணிச்சலாக களமிறக்கியது.
இரண்டாம் உலகப் போரின்
போதே பெண் ஸ்னைப்பர் வீரர்களை களமிறக்கி, எஞ்சிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது மட்டுமின்றி, போரின் போது ஆண்களுக்கு நிகராக துப்பாக்கிதாரிகள், விமானிகள் உள்ளிட்ட
பணிகளில் சுமார் 800,000 பெண்கள் சோவியத் யூனியனுக்கு சேவை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.