RRR படத்தில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஜூனியர் என்.டி.ஆர். , ராம்சரண் இணைந்து நடித்தனர். அதுபோல தமிழில் மாஸ் ஹீரோக்கள் ஒன்றாக நடித்த படங்களைப் பற்றி பார்ப்போம்.
ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. “நட்புன்னா என்னன்னு தெரியுமா” சூர்யா-தேவாவின் நட்பு, இன்றைக்கு வரை ரசிகர்களின் பேவரைட்.
RRR -ல் நடித்திருக்கிற ராம் சரணின் அப்பாவும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி – நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம் ‘இராணுவ வீரன்‘. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1981-ல் வெளியானது.
அன்பே சிவம் கமல்-மாதவன் இணைந்து நடித்திருந்தனர். இயக்கம் சுந்தர் சி. இன்றைக்கு வரைக்கும் கிளாசிக் படமாக கொண்டாடப்படுகிறது.
சூர்யா-விக்ரம் நடித்த ‘பிதாமகன்’ இயக்கம் பாலா. இந்தப்படத்தில் விக்ரமின் நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது.
பிரபு, கார்த்திக் நடிப்பில் 1988-ல் வெளியான படம் ‘அக்னி நட்சத்திரம்’. திரையில் இரண்டு ஹீரோக்களுக்கான ஸ்பேஸ் கொடுப்பதில் மணிரத்னம் பாணி தனித்துவமானது என்பதை உணர்த்திய படம்.
அஜித் -விஜய் இணைந்து நடித்த படம் ‘ராஜாவின் பார்வையிலே’ ஜானகி சௌந்தர் என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருப்பார். இவர்கள் இணைந்து நடித்த ஓரே படம் இதுதான்.
விஷால்-ஆர்யா நடிப்பில் ‘அவன் இவன்’ இயக்கம் பாலா. சூர்யா கேமியோ ரோல் செய்திருப்பார். இந்தப் படம் 2011-ல் வெளியானது.
கமல்-ரஜினி இணைந்து நடித்த படங்களில் எவர் கிரீன் படம் ’16 வயதினிலே’ கமல் வெகுளியான சப்பாணி கேரக்டரிலும் ரஜினி பரட்டை கேரக்டரிலும் நடித்திருப்பர். இயக்கம் பாரதிராஜா.
ரீசன்ட் டைம் பார்த்தோம்னா விஜய் சேதுபதி- மாதவனின் ‘விக்ரம் வேதா’ வில்லனுக்கு ஹீரோ அளவு ஸ்பேஸும் மாஸும் உள்ள படம். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 2017-ல் படம் வெளியானது.
பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த கோலாப்ரேஷன் என்று கூட சொல்லலாம். விஜய்-விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் Swag – கான வெற்றிபெற்றது.
‘கண்ணா இரண்டு லட்டு’ என்பது போல தான் இரு ஹீரோ நடிக்கும் படங்கள் -ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். எந்த இரு கதாநாயகர்கள் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமென்டில் சொல்லுங்க.