இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து குறைந்த வந்த நிலையில் நடுத்தர மக்கள் நீண்ட காலச் சேமிப்புக்காகத் தங்கத்தை வாங்கத் திட்டமிடும் நேரத்தில் சில முக்கியக் காரணத்தால் தங்கம் விலை உயரத் துவங்கியுள்ளது.
தங்கம் விலை இன்று இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் உயர என்ன காரணம்.
நெருங்கி வரும் ஆஸ்திரேலியா.. FTA குறித்து விரைவில் அறிவிப்பு.. இந்தியாவுக்கு பலன்?
ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை
கடந்த ஒரு மாதமாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, இரு நாடுகளும் கடந்த 2 வாரமாகப் பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைனின் தலைநகர் மற்றும் வடக்கைச் சுற்றி இராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பதாக ரஷ்யா உறுதியளிக்கிறது.
நேட்டோ படை
உக்ரைன் நேட்டோவில் சேராமல் நடுநிலையைப் பின்பற்றும் அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு
இந்த முடிவின் மூலம் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் குறைந்து முதலீட்டு சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதன் வாயிலாக அமெரிக்க டாலரின் மதிப்பும் சரிய துவங்கியுள்ளது, மேலும் அமெரிக்கப் பத்திர முதலீட்டின் மீதான லாப அளவுகளும் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இதேவேளையில் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியத் தடையாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தில் சரிந்த நிலையில் இன்று கிட்டதட்ட 2 சதவீதம் உயர்ந்துள்ளது. WTI கச்சா எண்ணெய் விலை 2.08 சதவீதம் வரையில் உயர்ந்து 106.4 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.77 சதவீதம் உயர்ந்து 112.2 டாலராகவும் உயர்வு.
தங்கம் மீது முதலீடு
இந்த வர்த்தக மாற்றத்தின் காரணமாக, குறிப்பாக அமெரிக்கா டாலர் மற்றும் பத்திர முதலீட்டு லாபம் குறைந்துள்ள காரணத்தால் அதிகளவிலான முதலீடுகள் தற்போது தங்கம் மீது திரும்பியுள்ளது. இதனால் 3 நாட்களாகச் சரிந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
எம்சிஎக்ஸ் தங்கம் வெள்ளி விலை
எம்சிஎக்ஸ் சந்தையின் புதன்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.52 சதவீதம் வரையில் உயர்ந்து 51554.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது, 1 கிலோ வெள்ளி விலை 0.77 சதவீதம் உயர்ந்து 67462.00 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் 1893 டாலராக இருந்த நிலையில் இன்று 1927 டாலராக உயர்ந்துள்ளது.
ரீடைல் சந்தை விலை
இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள விலை மாற்றங்கள் ரீடைல் சந்தையிலும் பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. இதன் மூலம் இன்றைய காலை வர்த்தகச் சூழ் நிலைப்படி நாட்டின் முக்கிய நகரங்களில் தங்கம் விலையை இப்போது பார்ப்போம்.
22 கேரட் தங்கம் விலை
சென்னை – 47,920 ரூபாய்
மும்பை – 47,650 ரூபாய்
டெல்லி – 47,650 ரூபாய்
கொல்கத்தா – 47,650 ரூபாய்
பெங்களூர் – 47,650 ரூபாய்
ஹைதராபாத் – 47,650 ரூபாய்
கேரளா – 47,650 ரூபாய்
புனே – 47,700 ரூபாய்
வதோதரா – 47,700 ரூபாய்
அகமதாபாத் – 47,680 ரூபாய்
ஜெய்ப்பூர் – 47,800 ரூபாய்
லக்னோ – 47,800 ரூபாய்
கோயம்புத்தூர் – 47,920 ரூபாய்
மதுரை – 47,920 ரூபாய்
விஜயவாடா – 47,650 ரூபாய்
பாட்னா – 47,700 ரூபாய்
நாக்பூர் – 47,700 ரூபாய்
சண்டிகர் – 47,800 ரூபாய்
சூரத் – 47,680 ரூபாய்
புவனேஸ்வர் – 47,650 ரூபாய்
மங்களூர் – 47,650 ரூபாய்
விசாகப்பட்டினம் – 47,650 ரூபாய்
நாசிக் – 47,700 ரூபாய்
மைசூர் – 47,650 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
சென்னை – 52,280 ரூபாய்
மும்பை – 51,980 ரூபாய்
டெல்லி – 51,980 ரூபாய்
கொல்கத்தா – 51,980 ரூபாய்
பெங்களூர் – 51,980 ரூபாய்
ஹைதராபாத் – 51,980 ரூபாய்
கேரளா – 51,980 ரூபாய்
புனே – 52,030 ரூபாய்
வதோதரா – 52,030 ரூபாய்
அகமதாபாத் – 52,060 ரூபாய்
ஜெய்ப்பூர் – 52,130 ரூபாய்
லக்னோ – 52,130 ரூபாய்
கோயம்புத்தூர் – 52,280 ரூபாய்
மதுரை – 52,280 ரூபாய்
விஜயவாடா – 51,980 ரூபாய்
பாட்னா – 52,030 ரூபாய்
நாக்பூர் – 52,030 ரூபாய்
சண்டிகர் – 52,130 ரூபாய்
சூரத் – 52,060 ரூபாய்
புவனேஸ்வர் – 51,980 ரூபாய்
மங்களூர் – 51,980 ரூபாய்
விசாகப்பட்டினம் – 51,980 ரூபாய்
நாசிக் – 52,030 ரூபாய்
மைசூர் – 51,980 ரூபாய்
வெள்ளி விலை
சென்னை – 72100 ரூபாய்
மும்பை – 72100 ரூபாய்
டெல்லி – 67200 ரூபாய்
கொல்கத்தா – 67200 ரூபாய்
பெங்களூர் – 72100 ரூபாய்
ஹைதராபாத் – 72100 ரூபாய்
கேரளா – 72100 ரூபாய்
புனே – 67200 ரூபாய்
வதோதரா – 67200 ரூபாய்
அகமதாபாத் – 67200 ரூபாய்
ஜெய்ப்பூர் – 67200 ரூபாய்
லக்னோ – 67200 ரூபாய்
கோயம்புத்தூர் – 72100 ரூபாய்
மதுரை – 67200 ரூபாய்
விஜயவாடா – 72100 ரூபாய்
பாட்னா – 67200 ரூபாய்
நாக்பூர் – 67200 ரூபாய்
சண்டிகர் – 67200 ரூபாய்
சூரத் – 67200 ரூபாய்
புவனேஸ்வர் – 67200 ரூபாய்
மங்களூர் – 72100 ரூபாய்
விசாகப்பட்டினம் – 72100 ரூபாய்
நாசிக் – 67200 ரூபாய்
மைசூர் – 72100 ரூபாய்
Gold MCX Futures snaps 5-day fall, price gains amid USD and US yield falls after Russia Peace talks
Gold MCX Futures snaps 5-day fall, price gains amid USD and US yield falls after Russia Peace talks தங்கம் விலை உயர துவங்கியது.. என்ன காரணம் தெரியுமா..?!