பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அஜ்மல் கசாப்பின் இருப்பிடம் குறித்த விரிவான தகவலை இந்தியாவிடம் அளித்ததாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் குற்றம்சாட்டுகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷேக் ரஷீத், “அஜ்மல் கசாப் எங்கிருக்கிறார் என்ற விவரங்களை இந்தியாவுக்குக் கசியவிட்டவர் நவாஸ் ஷெரீப்” என்று தெரிவித்தார்.
ஜெனரல் ஹெட்கார்டர்ஸ் கேட் எண் 4-ன் தயாரிப்பான நவாஸ் ஷெரீப், சதாம் ஹுசைன், கடாபி மற்றும் ஒசாமா பின்லேடனிடமிருந்து நிதி உதவியைப் பெற்றவர் என்றும் இம்ரான் கானின் அரசின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறினார்.
#WATCH Nawaz Sharif gave the address of Ajmal Kasab to India. I stand with you,interior minister of Pakistan Sheikh Rashid pic.twitter.com/Tr7AEoe1R5
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) March 30, 2022
பணத்துக்காக மனசாட்சியை விற்று பாகிஸ்தானுக்கு (Pakistan) களங்கம் விளைவித்தவர்கள் என்று எதிர் கட்சியினர் மீது உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மார்ச் 8 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள நிலையில், இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை, மார்ச் 31) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து ஏப்ரல் மூன்றாம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இம்ரான்கானிற்கு வலுக்கும் சிக்கல், கீழவையில் இம்ரானில் அரசு பெரும்பான்மையை இழந்தது
இதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்கு ஆதரவளித்து வந்த முட்டாஹிதா குவாமி இயக்கம் (MQM-P) ஆதரவை விலக்கி கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் பதற்றமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.
பாகிஸ்தான் அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்நாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதும், ராணுவத்தின் கையில் ஆட்சி சென்றுவிடுமா என்ற பல்வேறு கேள்விகள் சர்வதேச அளவில் எழுந்துள்ளன.
மேலும் படிக்க | Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!