எகிறி வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி திரும்பியுள்ளனர். அலுவலகத்துக்கு செல்பவர்கள், அன்றாடம் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று திரும்புவர்களின் விருப்ப தேர்வாக மின்சார வாகனங்களே உள்ளன.
ஆனால்
பேட்டரி வாகனங்கள்
வெடித்து சிதறும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மார்ச் 26ஆம் தேதி வேலூரில் சார்ஜ் செய்யும் போது மின்சார ஸ்கூட்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே தந்தை, மகள் உயிரிழந்தனர். மார்ச் 28ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் திருச்சி மணப்பாறையில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறியது. நேற்று மார்ச் 29ஆம் தேதி சென்னை மாதவரத்தில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறியது. நல்வாய்ப்பாக திருவள்ளூர், திருச்சி, சென்னை சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார ஸ்கூட்டர் கடந்த சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. நாடு முழுவதும் இப்படியான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது பற்றிய விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலை போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகமானது, தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தீப்பற்றுவதற்கு காரணமான சூழ்நிலை குறித்த ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளது.
அடுத்த செய்திவாரத்தில் 5 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்!