கடந்த சில காலாண்டுகளாகவே அதானி குழும நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபம் கொடுக்கும் பங்குகளாக இருந்து வருகின்றன. குறிப்பாக அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த 2 மாதத்தில் மட்டும் 133% லாபம் கொடுத்துள்ளது.
அதானி குழுமத்தினை சேர்ந்த இப்பங்கின் விலை பட்டியலிடப்பட்டபோது பிஎஸ்இ-யில் 221 ரூபாயாக இருந்தது.
6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்!
ஆனால் இன்று அதன் விலை அதன் ஆல் டைம் உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது இனியும் அதிகரிக்குமா? வாங்கி வைக்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
என்.எஸ்.இ-ல் பங்கு விலை?
அதானி வில்மர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது பி.எஸ்.இ-யில் 64,853 கோடி ரூபாயாக உள்ளது. இதன் பங்கு விலையானது மதிய அமர்வில் அதன் ஆல் டைம் உச்சமான 514 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 1.53% சரிந்து என்.எஸ்.இ-யில் 492.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 514 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 480.15 ரூபாயாக உள்ளது.
பி.எஸ்.இ-யில் என்ன நிலவரம்?
பி.எஸ்.இ-யில்இந்த பங்கின் விலையானது 1.40% குறைந்து, 492.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 514.95 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 479.80 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 514.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 479.80 ரூபாயாக உள்ளது.
51% ஏற்றம்
மொத்தம் 14.25 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. அதன் மதிப்பு 70.65 கோடி ரூபாயாகும். கடந்த 16 வர்த்தக அமர்வில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 7ம் தேதி இப்பங்கின் விலையானது 340.70 ரூபாயாக இருந்தது. அதானி குழும பங்கானது 221 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்களில் இப்பங்கின் விலையானது இரட்டிப்பாகும்.
நிபுணர்களின் பரிந்துரை என்ன?
டிப்ஸ்2டிரேடர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் பயிற்சியாளருமான ஏ.ஆர் ராமசந்திரன், வலுவான ஃபண்டமெண்டல் காரணிகளுக்கு மத்தியில் இப்பங்கின் விலையானது நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது. டெக்னிக்கலாக 504 ரூபாயாக முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக உள்ளது. அதனை உடைத்துள்ள நிலையில் அடுத்த முக்கிய லெவல் 630 ரூபாயாகும். இது கீழாக 428 – 430 ரூபாய் என்ற லெவலில் வாங்க வாய்ப்பு கிடைத்தால் வாங்கி வைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
என்ன செய்யலாம்?
இதே மனோஜ் டால்மியா நிறுவனர் மற்றும் இயக்குனர், அதானி வில்மர் பங்கானது உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு பின்னர் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியினை பாதிக்கலாம். ஆதாரங்களின் படி, மொத்த இறக்குமதியில் உக்ரைன் 70%மும், ரஷ்யா 20%மும் இறக்குமதி செய்கின்றன. இப்பங்கினை தற்போதைக்கு வாங்க பரிந்துரை செய்யவில்லை. எனினும் இது 405 ரூபாயினை தொடும்போது வாங்கலாம். அப்படி வாங்கும் பட்சத்தில் இது 456 ரூபாய் என்ற லெவலை தொடலாம்.
ஷேர் இந்தியா?
ஷேர் இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவரும், துணைத் தலைவருமான ரவி சிங் கூறுகையில், அதானி வில்மர் வலுவான அடிப்படைகளை கொண்டுள்ளன. டெக்னிக்கலாக RSI, MACD- போன்ற அனைத்து குறியீட்டிலும் விரைவில் 550 ரூபாயினை தொடலாம்.
adani wilmar stocks jump 133% in just 2 months: is it a right to buy?
adani wilmar stocks jump 133% in just 2 months: is it a right to buy?/அதானியின் பணமழை.. 2 மாதத்தில் 133% லாபம்.. இனியும் வாங்கலாமா?