தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் இருந்த வார்த்தைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம் பெண், அவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
அதே பகுதியில் +2 படிப்பை முடித்த அவர், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் நரியன்குளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த மாணவியை திருமணம் செய்து வைப்பதற்காக அவரின் உறவினர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் மாணவி இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்னர் அவர் எழுதியிருந்த கடிதத்தில், ஒருத்தன் நான் குளிப்பதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான். அவனிடம் இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு அம்மா.
எனக்கு அதிகநாள் வாழ ஆசைதான். ஆனால் என்ன பண்ண கடவுள் என்னை வாழ விடல என எழுதியுள்ளார்.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. கடிதம் மற்றும் மாணவியின் செல்போனை கைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.