இரு மாநிலங்களின் ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் குறித்து தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “இரு மாநில ஆளுநராக உள்ள தமிழிசையை ஒருமையில் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்களுக்குத்தான் கண்டனம் தெரிவிக்க முடியாது., இந்த மாதிரி பேசும் நபர்களை மக்கள் தான் கண்டிக்க வேண்டும். அரசியலில் கருத்தியல் ரீதியாக திமுகவால் முடியவில்லை. அதனால் அவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்” என்று அண்ணாமலை அந்தப் பேட்டியின் போது தெரிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் அந்த வேதனை பேச்சு,
“நான் சமூக வலைதளங்களில் நான் பார்த்துக்கொண்டு இந்திருந்தபோது, என்னைப் பற்றி ஒருவர் பேசுகிறார். அதில் அவர், ‘இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்’ என்று என்னை ஒருமையில் பேசுகிறார்.
இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருப்பது என்பது சுலபமான காரியமா? தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலத்தை ஆளுகின்றார் என்பதை நினைத்து ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.
ஆனால், பேரறிஞர் அண்ணா விருது வாங்கிய ஒருவர் என்னை ஒருமையில் என்னை பேசுகிறார். ‘இவள் எல்லாம் 2 மாநிலத்தின் ஆளுநர்’ என்று பேசுகிறார். இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், தயவு செய்து திட்டும் போது கூட மரியாதை குறைவான வார்த்தைகளால் விமர்சனம் அல்லது திட்டாதீர்கள். தமிழுக்கு மரியாதை மரியாதை இல்லை என்றால்., நீங்கள் தமிழர்களே கிடையாது என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” இவ்வாறு ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பேசி இருந்தார்.