ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால், அந்நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தொடர் மழையால் அங்குள்ள ஆற்றின் கரைகள் உடைந்து சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இம்மாதத் தொடக்கத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், இரண்டாம் முறையாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதே போல, கடலோர நகரமான பைரன் பே நகரிலும் இடைவிடாது மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.