மாத சம்பள வாங்குவோர் அனைவருக்கும் வருமான வரி என்பது எவ்வளவு வேதனையானது என்பதைச் சொல்லி தெரிய தேவையில்லை. சம்பளத்தில் பெரும் பகுதி வருமான வரியாக மட்டுமே செலுத்துவோர் வருமான வரி என்ற வார்த்தையை கூடக் கேட்க விரும்ப மாட்டார்கள்.
இந்த நிலையில் சுமார் 11 நாடுகளில் வருமான வரியே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
பேக்கரி-களுக்கு இனி 18% ஜிஎஸ்டி வரி..? மத்திய அரசு செக்..!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
எண்ணெய் வளம் நிறைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அந்நாட்டு மக்களுக்கு வருமான வரி விதிப்பது இல்லை. நீங்கள் சரியாகப் படித்தீர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டு மக்கள் உயர்தர வாழ்க்கை வாழும்போது இதேவேளையில் தனிநபருக்கான வருமான வரி பூஜ்ஜியம் என்பது வியப்பு அளிக்கும் விஷயம் தான்.
எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் மீதான கார்ப்பரேட் வரி இந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது.
மொனாக்கோ
உலகின் இரண்டாவது சிறிய நாடான மொனாக்கோ, எந்த விதமான மூலதன ஆதாய வரிகளையும் வசூலிப்பதில்லை இதேபோல் எவ்விதமான வெல்த் டாக்ஸ்-ம் விதிப்பது இல்லை.
இந்த அழகான குட்டி நாடான மொனாக்கோ-வில் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு அதேபோல் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நாடுகளில் ஒன்றாகும்.
கெய்மன் தீவுகள்
கெய்மன் தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு தீவு.
கெய்மன் தீவுகளில் தனிநபர் வருமான வரி இல்லை. அது மட்டும் அல்லாமல் பரிசு வரி, இறப்பு வரி, எஸ்டேட் வரி, பரம்பரை வரி என எதுவும் இல்லை. மேலும் உலக நாடுகளில் இருந்து வருமானத்திற்கு மூலதன ஆதாய வரி இல்லை.
கத்தார்
கத்தார் எண்ணெய் வளம் மிக்க நாடு. கத்தாரில் வேலை செய்யும் நபர்களின் சம்பளம், ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு வருமான வரி விதிப்பது இல்லை.
பஹ்ரைன்
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள பஹ்ரைன், 50 இயற்கைத் தீவுகள் மற்றும் 22 செயற்கைத் தீவுகளைக் கொண்ட ஒரு சிறிய தீவுக்கூட்டமாகும். கத்தாரை போலவே பஹ்ரைன்-ம் எண்ணெய் வளம் அதிகம் கொண்ட நாடு.
பஹ்ரைன் அரசு அதன் குடிமக்களுக்கு எவ்விதமான தனிநபர் வரியையும் விதிப்பது இல்லை. இதேபோல் விற்பனை, மூலதன ஆதாயங்கள் அல்லது எஸ்டேட் போன்றவற்றுக்கும் வரி இல்லை.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் செயல்படும் அல்லது புதை படிவ எரிபொருட்களை பிரித்தெடுத்தல் அல்லது சுத்திகரிப்பு மூலம் லாபம் ஈட்டும் வணிகங்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் பஹ்ரைன் தனது வருமானத்தை ஈட்டுகிறது.
பெர்முடா
தனிநபர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாமல் இருப்பதற்காகவே பெர்முடா-வுக்குத் தனிப்பட்ட புகழ் உள்ளது. தனிநபர் வருமானம் மட்டும் அல்லாமல் இந்த நாட்டில் கார்ப்பரேட் வருமான வரிகள், வாட் அல்லது விற்பனை வரிகள் எதுவும் இல்லை. இந்நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் செலுத்தும் ஊதியத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது.
குவைத்
குவைத் தனிநபர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வருமான வரி விதிக்கவில்லை. ஆனால் சமூகப் பாதுகாப்பிற்கான பங்களிப்பு உள்ளது, இதற்காக ஊழியர்களும், முதலாளிகளும் பணத்தைச் செலுத்துகின்றனர்.
பஹாமாஸ்
பஹாமாஸ் சுற்றுலாப் பயணிகளின் புகலிடமாகும். பஹாமாஸ் சுற்றுலாத் துறை வாயிலாக வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் பஹாமாஸ் உலகப் பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.
பஹாமாஸின் குடிமக்களின் வருமானம், பரம்பரை, பரிசுகள் அல்லது மூலதன ஆதாயங்கள் போன்ற அனைத்திற்கும் 0 சதவீத வரி தான். அந்நாட்டு மக்கள் யாரும் தனிநபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
ஓமன்
பிற வளைகுடா நாடுகளைப் போலவே ஓமன் வருவாய் பெறுவதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெரிய அளவில் சார்ந்துள்ளது. இந்நாட்டில் தனிநபர் வருமான வரி என்பது போன்ற எந்த வரியும் வசூலிப்பது இல்லை.
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
கரீபியன் தீவுகளில் வரி இல்லாத நாடுகளில் மிகவும் பிரபலமானவை செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ். இந்தத் தீவு நாட்டில் வருமான வரி அல்லது வேறு எந்த வகையான வரிகளும் இல்லை.
இந்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரம் சுற்றுலா, மேலும் அவை வெளிநாட்டுக் குடிமக்களுக்குக் குடியுரிமை அளிக்கும் திட்டங்கள் மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வருகிறது.
வனுவாட்டு (Vanuatu)
வனுவாட்டு ஒரு தென் பசிபிக் தீவு நாடு. இந்நாட்டில் வருமானம், லாபங்கள், ஈவுத்தொகைகள் அல்லது வருமானங்கள் மீதான வரிகள் இல்லை, இதேபோல் மூலதன ஆதாய வரிகளும் இல்லை.
இந்த 11 நாடுகளில் தான் உலக நாடுகளில் தான் தனிநபருக்கு வரி இல்லாமல் இயங்கும் நாடுகளாக உள்ளது.
ZERO income tax: Check the interesting countries list around the world
ZERO income tax: Check the interesting countries list around the world இங்க வருமான வரியே இல்லையாம்.. கேட்கவே நல்லாருக்கே.. எந்த நாடு தெரியுமா..?