வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயர் சொல்லி அவதூறாக பேசிய போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டது தண்டனை அல்ல பரிசு என்று, ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,
“திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து எதிர்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் வழக்குகள் போட்டு வருகின்றது. என்மீது போடப்பட்ட பொய் வழக்கை நான் சட்டரீதியாக சந்தித்து வருகிறேன்.
பொய்வழக்கு போடுவதில் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறும் வகையில் முதல்வர் முக ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவி நீக்காமல் வேறு இலாகா மாற்றம் செய்திருப்பது, அவருக்கு கிடைத்த ஒரு பரிசுதான். இது தண்டனை அல்ல.
பெயருக்கு வெளியேதான் திராவிட மாடல் என்று சொல்கிறார்கள்., வெளிநாடு முதலீடுகள் எல்லாம் எதற்கு என்பது என்று நினைத்தால்., ‘மாலு மாலு சுறாங்கனிக்க மாலு’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
வெளிநாடு பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் ஏன் சென்றார் தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்” என்று ஜெயக்குமார் அந்த செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.