கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை, மோசமான விலையேற்றத்தினால், மக்கள் பெரும் பிரச்சனைகளால் தத்தளித்து வருகின்றனர்.
நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பொருளாதார பிரச்சனையை சமாளிக்க, இலங்கை அரசு இந்தியாவிடம் கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் கடன் கோரியுள்ளது.
முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..!
தொடர்ந்து இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு 70% சரிந்ததையடுத்து, அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றது.

விலைவாசி ஏற்றம்
குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறை, உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு, தினசரி மின் வெட்டு உள்ளிட்ட பல பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதனால் அங்கு கடும் போராட்டமும் நிலவி வருகின்றது. இது அரசுக்கு எதிராக போரட்டங்களை தூண்டியுள்ளது.

மதிப்பீட்டு நிறுவனங்கள்
சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் கடன் மதிப்பீட்டினை குறைத்துள்ளன. இந்த ஆண்டு அதன் 52 பில்லியன் இறையாண்மை கடனை திரும்ப செலுத்த முடியாது என்று நம்புகின்றனர். தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், தொடர்ந்து பணவீக்கம் உச்சம் தொட்டு வருகின்றது.

என்ன காரணம்?
கொரோனா காலத்தில் சுற்றுலாத் துறையை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரியான நேரத்தில் இல்லாத வரிக் குறைப்புகள், பலவீனமான அரசாங்க நிதி மற்றும் விண்ணைத் தொடும் பணவீக்கம், வெளி நாட்டுக்கு பணம் அனுப்புதலில் ஏற்பட்டுள்ள தாக்கம் போன்றவை, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் உள்ள சில முக்கிய காரணிகளாகும்.

கடன் நிலுவை
இந்த ஆண்டின் பிற்பகுதியில் 4 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. அதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் இறையாண்மை பத்திர வடிவில் 1 பில்லியன் டாலர் ஆகும். இது ஏற்கனவே நிலவி வரும் அன்னிய செலவாணி கையிருப்பு 70% சரிந்துள்ள நிலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்த இருப்பு
தற்போதுள்ள கையிருப்பானது எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளின், ஒரு மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
மின்சார உற்பத்தி மிக மோசமான பாதிப்பினை கண்டுள்ளது. இது பிரிண்டிங் துறை, பள்ளி தேர்வுகளை ஒத்தி வைப்பதற்கும், புதிய வெளியீடுகளையும் குறைக்க தூண்டுகிறது.

தொடர்ந்து பிரச்சனை
இது ஒரே இரவில் நடந்ததல்ல, இது நீண்டகாலமாக இருந்தது. இலங்கை பொருளாதாரம் பல வருடங்களாக பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த 2019ல் இலங்கை அரசாங்கம் வரி குறைப்புகளை அறிவித்தது. இது அரசின் வருமானத்தை குறைத்தது.

வரி குறைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, நுகர்வு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க 15% வரியை பாதியளவு குறைப்பதாகவும், ஏனைய வரிகளை ரத்து செய்வதாகவும் உறுதியளித்தார். இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்பின்போது இந்த துறை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு முன்பே, கொரோனா கடுமையாகத் தாக்கியது.

சுற்றுலா துறை பாதிப்பு
பிப்ரவரி நடுப்பகுதி வரை ரஷ்யா – உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 25% வருகை தந்துள்ளனர். எனினும் தற்போது வரையில் பொருளாதாரம் மீளவில்லை. மேலும் தற்போது ரஷ்யா மீதான தடையும் நாட்டின் பொருளாதார தடைகளும் நாட்டின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது.

கடனுக்கு கோரிக்கை
அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த , இந்தியாவிடம் கடனுக்காக கோரிக்கை விடுத்துள்ளது.
How did Sri Lanka get caught up in the economic crisis?
How did Sri Lanka get caught up in the economic crisis?/இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது எப்படி.. பணவீக்கத்தால் திண்டாடும் மக்கள்!