உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்பட்டதாக கூறுவது ஏமாற்று வேலை எனவும் படைகளானது இடமாற்றம் தான் செய்யப்படுகிறது எனவும் பரபரப்பு தகவலை பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனில் ரஷ்யாவின் செயல் ஒரு ஏமாற்று வேலை என கூறினார்.
இதையும் படிங்க: வடகொரியா, தென்கொரியா போல உக்ரைனை இரண்டாக உடைத்து… ரஷ்யா அதிரடி முடிவு
அதாவது, உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை. இடமாற்றம் தான் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷிய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல்.
ரஷ்யாவின் அறிவிப்பால் கீவ் நகருக்கான அச்சுறுத்தல் முடிந்து விட்டது என கருத முடியாது எனவும் ஜான் கிர்பி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய படைகள் திரும்ப பெறப்பட்டதாக அந்நாடு கூறியதால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல் ரஷ்யா வேறு வழியில் சதி வேலையில் இறங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.