ஏப்ரல் 1 முதல் புதிய சுங்க விதிகள் – விலை குறையும் ஸ்மார்ட்போன்கள்!

ஒன்றிய அரசு, பிப்ரவரி மாதம் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், மின்னணு பொருள்கள் மீதான சுங்க வரியில் பல மாற்றங்களை அறிவித்தது. எனவே, ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், ஹெட்ஃபோன்கள், இயர்பட்ஸ் ஆகியவற்றின் விலைகள் மாறப்போகிறது.

இந்த மாற்றம் ஏப்ரல் 1, 2022 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட எந்தெந்த டெக் சாதனங்களின் விலை உயருகிறது என்பதை பார்க்கலாம்.

விலை குறையும் ஸ்மார்ட்போன்கள்

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் உங்களுக்காக ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. மொபைல் போன் சார்ஜர்களின் டிரான்ஸ்பார்மர் பாகங்கள், மொபைல் கேமரா லென்ஸ்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான சுங்க வரியை 5 முதல் 12.5% விழுக்காடாக அரசாங்கம் குறைத்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் செலவு குறையும். இத்தகைய சூழ்நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LED டிவி விலை வெறும் ரூ.999 – பட்டன் போனை விட மலிவான டிவிக்கள்!

ஸ்மார்ட்வாட்ச்கள் / Fitness Bands

ஸ்மார்ட்வாட்ச்கள், ஃபிட்னஸ் பேண்டுகள் போன்ற சாதனங்களை நீங்கள் வாங்க விரும்பினால், இதன் விலைகளும் புதிய விதிகளின்படி உங்களுக்காக குறைக்கப்படலாம். ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியாளர்களுக்கு மார்ச் 31, 2023 வரை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

எனவே, ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு, நாட்டில் ஸ்மார்ட் வாட்ச்கள், ஃபிட்னஸ் பேண்டுகளின் விலை குறையலாம். எனவே, ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஸ்மார்ட் பேண்டுகள் வாங்க காத்திருப்போர், புதிய விலை பட்டியல் தயாராகும் வரை காத்திருந்து வாங்கலாம்.

Jio அதிரடி – முதல் முறையாக சூப்பர் திட்டம் அறிமுகம்!

வயர்லெஸ் இயர்பட்கள் (Wireless Earbuds)

இயர்பட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கான வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் 1 முதல் இயர்பட்களின் உற்பத்தி செலவை அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோன்ற சூழலில், பயனர்கள் வயர்லெஸ் இயர்பட்கள், நெக்பேண்ட் ஹெட்ஃபோன்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இயர்பட்ஸ் சந்தை வேகமாக வளர்ந்து வரும் வேளையில், அரசின் இந்த முடிவு பயனர்களுக்கு வருதத்தை அளிக்கலாம்.

எலான் மஸ்க் தொடங்கும் புதிய சோஷியல் மீடியா?

பிரீமியம் ஹெட்ஃபோன்கள் (Premium Headphones)

ஹெட்ஃபோன்களின் நேரடி இறக்குமதிக்கு 20% விழுக்காடு கூடுதல் கட்டணத்தை அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளது. இந்த விதி நாடு முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் மறுபுறம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெட்ஃபோன்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

வீட்டு உபயோகப் பொருள்கள் (Household Applainces)

2022 பட்ஜெட்டில், கம்ப்ரசர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் பாகங்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவதாகவும் அரசாங்கம் அறிவித்தது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், ஏப்ரல் 1 முதல், குளிர்சாதனப் பெட்டி உற்பத்தியாளர்கள் நாட்டில் குளிர்சாதனப் பெட்டிகளின் விலையை அதிகரிக்கலாம். எனவே, ஏசி வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இப்போதே ஆர்டர் போட்டு விடுங்கள்.

மேலதிக செய்திகள்:

கொளுத்தும் வெயிலுக்கு குளுகுளு AC – அதிரடி தள்ளுபடியில் சிறந்த ஸ்மார்ட் Inverter ஏசிக்கள்!இந்த போன்களில் இனி WhatsApp இயங்காது!சும்மா மாஸ் காட்டும் Poco X4 Pro 5G போன் – ஒரு குறையும் இல்லங்க!

அடுத்த செய்திபொழுதுபோக்கை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் – Samsung அளிக்கும் உறுதிமொழி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.