சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பினருக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், முதல்கட்டமாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி களில், நடப்பாண்டு ஆண்டு இறுதித்தேர்வு நேரடித்தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிளஸ்2 மாணாக்கர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நேரடித்தேர்வாக நடத்தப்பட்டது/
தொடர்ந்து, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9 ஆம் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. முதலில் 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.