ஓரே நாளில் 84 பில்லியன் டாலர் சம்பாதித்த டெஸ்லா..!

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் அதன் சந்தை மதிப்பு சுமார் 84 பில்லியன் டாலர் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது மொத்த போர்டு நிறுவனத்தின் சந்தை மதிப்பு விடவும் அதிகமாகும்.

முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..!

இந்தத் திடீர் உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா..?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா தனது உற்பத்தியை அதிகரிக்க ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன ஐரோப்பாவில் முதல் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின்-க்கு அருகில் சில நாட்களுக்கு முன்பு திறந்தது.

டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம்

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தியும், வர்த்தகமும் அடுத்தச் சில வருடத்திற்குள்ளேயே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த 2 வருடத்திற்குள் டெஸ்லா பங்குகளை ஸ்டாக் ஸ்பிலிட் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளை முடித்துவிட்டுச் சரியான நேரத்தில் பங்குகள் உடைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஸ்டாக் ஸ்பிலிட்
 

ஸ்டாக் ஸ்பிலிட்

இந்த அறிவிப்பு வெளியான உடனே டெஸ்லா பங்குகள் 999 டாலரில் இருந்து 1,092.58 டாலர் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 84 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.13 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.

அமேசான், ஆல்பபெட்

அமேசான், ஆல்பபெட்

சமீபத்தில் அமேசான் தனது பங்குகள் 20:1 ஆக ஸ்டாக் ஸ்பிலிட் செய்யத் திட்டமிட்ட அறிவிப்பை வெளியிட்டது. இது பங்குச்சந்தையில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது டெஸ்லா அறிவித்துள்ளது. அதற்கு முன்பு சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் ஆகிய நிறுவனம் அறிவித்தது.

ஆகஸ்ட் 2020

ஆகஸ்ட் 2020

கடைசியாக டெஸ்லா தனது பங்குகளை ஆகஸ்ட் 2020 இல் ஸ்பிலிட் செய்தது. 2020 காலகட்டத்தில் டெஸ்லா பங்கின் விலை அந்த ஆண்டு 743 சதவீதம் வரையில் அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்ததுள்ளது. இதனால் இந்த ஸ்டாக் ஸ்பில்ட்-ம் முதலீட்டாளர்களுக்கும், டெஸ்லாவுக்கும் பெரும் லாபத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla adds 84 billion dollar MCAP in 1 day amid Stock Split announcement

Tesla adds 84 billion dollars MCAP in 1 day amid Stock Split announcement ஓரே நாளில் 84 பில்லியன் டாலர் சம்பாதித்த டெஸ்லா..!

Story first published: Wednesday, March 30, 2022, 9:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.