சென்னை: கடந்த ஆண்டு ஓடும் ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்ததற்காக 1,369 வழக்குகள் பதிவு செய்து, 1,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ரயிலில் உள்ள அபாய சங்கிலியை பாதுகாப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நேரங்களில் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.