புதுச்சேரி : காசநோய் பாதிப்பினை குறைத்ததற்காக, புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெள்ளிப் பதக்கம் வழங்கி பாராட்டி உள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம், கடந்த 2004ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது,’தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்’ என பெயர் மாற்றப்பட்டு செயல்படுத்தப் படுகிறது.காசநோய் பாதிப்பை குறைத்ததற்காக, புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெள்ளிப் பதக்கம் வழங்கி பாராட்டி உள்ளது.கடந்த 2015ம் ஆண்டு முதல் காசநோய் பாதிப்பினை 40-59 சதவீதம் வரை குறைத்ததற்காக பாராட்டு தெரிவித்தது.
இப்பதக்கத்தை புதுச்சேரிக்கு கடந்த 24ம் தேதி மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் வழங்கியது.விருது பெற்ற புதுச்சேரி சுகாதாரத் துறையை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, காசநோய் தடுப்பு பிரிவு மாநில அதிகாரி கோவிந்தராஜன், முன்னாள் சுகாதாரத் துறை இயக்குனர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement