காமெடியன்களுக்கு கட்டம் சரியில்லை போலும்.. எங்கு பார்த்தாலும் அடியும், இடியுமாக இருக்கிறது.
உக்ரைன் அதிபர்
விலாடிமிர் ஜெலன்ஸ்கி
. அடிப்படையில் ஒரு காமெடி நடிகர். நடிகராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். இன்று உக்ரைன் மக்களின் நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். அவர் யூதர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் பல மேற்கத்திய நாடுகளும் அவரைத் தூக்கிப் பிடிக்கின்றன.
ஜெலன்ஸ்கி இன்று ரஷ்யாவின் கையில் சிக்கி திண்டாடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ரொம்பத் தைரியமாகத்தான் இருந்தார். தெம்பாகவும் காணப்பட்டார். காரணம், நேட்டோ நாடுகள் துணைக்கு வரும்.. கேட்டதையெல்லாம் தரும்.. கலக்கி விடலாம்.. ரஷ்யாவை வெளுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். கடைசியில் வெற்றும் காற்றுதான் வந்தது.. கொஞ்சம் போல ஆயுதத்தைக் கொடுத்து விட்டு நைஸாக ஓரம் கட்டி விட்டன நேட்டோ நாடுகள்.
இப்போது ரஷ்யாவின் தாக்குதலில் சிக்கி, மீள முடியாத நிலையில் இருக்கிறார் ஜெலன்ஸ்கி. ரஷ்யாவுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படி காமெடியனான ஜெலன்ஸ்கியை சீரியஸ் மோடிலேயே வைத்து வேடிக்கை பார்த்து வருகிறார் விலாடிமிர் புடின். இது ஒரு காமெடியனின் கதை.. இன்னொரு காமெடியன்.. வேறு யாருமல்ல.. வில் ஸ்மித்திடம் புளிச் என அடி வாங்கிய கிறிஸ் ராக்தான்.
“மிஸ்ஸைல்”.. டோட்டல் ஆபீஸும் காலி.. கவர்னருக்கு என்னாச்சு?.. நல்ல வேளை தூங்கிட்டாரு!
ஹாலிவுட்டின் மிகச் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நம்ம ராக். நிறையப் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியுள்ள இவர் ஒரு இயக்குநரும் கூட. 2 முறை ஆஸ்கர் விருது விழாவை தொகுத்தளித்துள்ளார். 4 எம்மி விருதுகள், 3 கிராமி விருதுகளையும் அள்ளியுள்ளார்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவின்போது ஒரு விருதை அறிவிக்க மேடைக்கு வந்த இவரது வாயில் சனி சற்று ஜாலியாக விளையாடி விட்டது போலும்.. சிறந்த நடிகர் விருது வாங்குவதற்காக மனைவி சகிதம் வந்து அமர்ந்து ஜாலியாக நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வில் ஸ்மித்தின் மனைவியைப் பற்றி கிண்டலடித்துப் பேச வழக்கமாக “ஜில்” ஆக இருக்கும்
வில் ஸ்மித்
.. வில்லன் ஸ்மித்தாகி விட்டார்.
“சபாஷ்.. சரியான பளார்”.. வில் ஸ்மித் விட்ட அடிக்கு.. ராமதாஸ் சூப்பர் சப்போர்ட்!
மெல்ல எழுந்து வந்து மேடையில் ஏறிய வில் ஸ்மித், பற்கள் பதினாறும் தெரிய சிரித்தபடி நின்றிருந்த ராக் கன்னத்தில் விட்டார் ஒரு பளார் அறை.. அடித்த வேகத்தில் நிலை குலைந்து போன ராக், அப்படியும் விடாமல், கீழே விழாமல் சமாளித்தபடி நின்றார். அப்போதும் கூட அவரது வாயிலிருந்து சிரிப்பு போகவில்லை.. என்ன அடி வாங்கினாலும்.. சிரிப்பை மட்டும் விட்ராத மச்சான்.. வலிச்சாலும் பரவாயில்லை.. வலியை வாய்க்குள் மறைத்துக் கொண்டு பல்லை மட்டும் வெளியே காட்டிரணும்.. அதுதான் காமெடியனின் பலமே!
இப்படி இரு பெரும் காமெடியன்களுக்கு இரு விதமான பிரச்சினைகள்.. ஒருவர் ரஷ்யாவின் படை பலத்தை சமாளித்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொருவரோ, அடுத்தவர் மனைவியைக் கிண்டலடிக்கப் போய் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆக மொத்தம் காமெடியன்களுக்கு நேரமே சரியில்லையோ என்னவோ!
அடுத்த செய்தி”மிஸ்ஸைல்”.. டோட்டல் ஆபீஸும் காலி.. கவர்னருக்கு என்னாச்சு?.. நல்ல வேளை தூங்கிட்டாரு!