புதுடில்லி: சில இன்ஜினியரிங் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் படிப்பது தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.
பொதுவாக இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த பாடங்களில் பெற்ற ‛கட் ஆப்’ மதிப்பெண்களை பொறுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மேலும், சில இன்ஜி., படிப்புகளிலும் இந்த பாடங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் சில பி.இ., படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்கள் தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.
அதன்படி, பெரும்பாலான பி.இ., படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை எனவும், கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படிப்பது கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள 2022-2023ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இதனை குறிப்பிட்டுள்ளது.
Advertisement