சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிக்கும் சமந்தா?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் , அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் , கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 22 வது படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோனி அஸ்வின் இயக்குகிறார் . இதை வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் . சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கு முன்பு சமந்தா சிவகார்த்திகேயனுடன் இணைந்து சீமராஜா படத்தில் நடித்திருந்தார் .