சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய கண்காட்சி மையம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
வணிக மையமாக விளங்கும் ஷாங்காயில் சுமார் 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, நகரில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை படிப்படியாக மேற்கொள்ளும் வகையில் ஹுவாங்பூ ஆற்றை மையமாக கொண்டு கிழக்குப்பகுதி, மேற்குப்பகுதி என நகரம் 2ஆக பிரிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.