Tamilnadu News Update : சமீபத்தில தஞ்சாவூரில் உண்மையை மறைத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் தகுதி நீங்கம் செய்யப்பட்டது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது திமுகவிற்கு மேலும் ஒரு தலைவலியாக சென்னையில் உள்ள ஒரு பகுதியில் கவுன்சிலர் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட் கொடுங்கையூர் கொய்யாத்தோப்பு சோலையம்மன் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் அப்பகுதியில் செந்தமான வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று இவரை சந்தித்த அப்பகுதியில் 16-வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி வீடு கட்ட முறையாக அனுமதி பெற்றுள்ளீர்களா என்று விசாரித்துள்ளார்.
இந்த விசாரணையின் போது ஷர்மிளா காந்தியும் உடன் இருந்துள்ளார். அப்போது தேவி, இது தங்களின் சொந்த இடம், இங்கு வீடு கட்ட முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார். அப்போது அனுமதி பெற்ற டாக்குமென்டை கொடுங்கள் அதை சரிபார்த்துவிட்டு நாங்கள் சொன்ன பிறகுதான் கட்டுமான வேலைகளை தொடங்க வேண்டும் என்று கூறி உடனடியாக கட்டுமாண பணிகளை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து தேவி மீண்டும் கேட்டபோது, கட்டுமான பணிகளை தொடங்க கருணாநிதி லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவி அடுத்த நாள் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று கேட்டுள்ளார். ஆனால் அங்கு கருணாநிதி ஷர்மிளாவுடன் இருந்து சிலர் தேவியை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் கருணாநிதி எல்லை மீறி பேசியுளளார்.
இந்த பேச்சுக்களை தேவி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த பேச்சுக்கு இடையே என்னால் பணம் தர முடியாது எங்களது இடத்தில் நாங்கள் வீடு கட்டுகிறோம். அதற்கு உங்களுக்கு எதற்காக பணம் கொடுக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வந்துவிட்டு இப்படி செய்யலாமா? மேடம் நீங்கள் தானே கவுன்சிலர் உங்கள் கணவர் எதற்காக பேசுகிறார். நீங்கள் பேசுங்கள் நான் வீடியோ எடுத்துக்கொள்கிறேன் என்று தேவி சொல்ல அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்.
இன்னும் மாமன்ற கூட்டம் தொடங்கப்படாத நிலையில், பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஒரு பெண்னை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ கட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதமே கடந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் உள்ளாட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் எம்பி கனிமோழி பேசியதை நினைவு கூர்ந்து வருகின்றனர். பெண் மேயர்கள் பதவியேற்றுக்கொண்ட அன்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக பேசிய எம்பி கனிமொழி, இந்த வாய்ப்பு அடுத்த தலைமுறையில் உள்ள உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும்.
அண்ணன் தம்பி இருக்கிறார்கள், கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்தக்கொள்வார்கள் என்று விட்டுவிடாதீர்கள். இது உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு உங்களால் நிச்சயம் முடியும். நீங்கள் சிறந்த ஆளுமை பண்புடன் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த சம்பவம் திமுகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“