டெய்லி மறக்காமல்.. இதை செய்து விடுகிறார் பிரதமர் மோடி.. ராகுல் காந்தி நக்கல்!

பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட பணிகளில் ஒன்றாக பெட்ரோல் டீசல் காஸ் விலை உயர்வு இடம் பெற்றுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி
நக்கலடித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் காஸ் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இடையில் 5 மாநிலத் தேர்தல் குறுக்கிட்டதால் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தனர். இப்போது தேர்தல் முடிந்து விட்டதால் விலைஉயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

விலை உயர்வால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஆனாலும் இந்த விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தபோது அதற்குப் போதிய ஆதரவு மக்களிடையே கிடைக்கவில்லை. பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட வேலைகளில் ஒன்றாக, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது, காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது, விவசாயிகளின் கனவுகளை சிதைப்பது , வேலை வாய்ப்பு தொடர்பாக இளைஞர்களுக்கு வெற்று உறுதிமொழிகளைத் தருவது ஆகியவை உள்ளது.

பெட்ரோல், டீசல், காஸ் விலையை இன்று எவ்வளவு உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்
பிரதமர் மோடி
. எப்படி மக்களை செயலிழக்கச் செய்வது என்று யோசிக்கிறார். இளைஞர்களுக்கு எப்படி வெற்று வாக்குறுதிகளை அளிக்கலாம் என்று யோசிக்கிறார். எந்த அரசு நிறுவனத்தை விற்கலாம், விவசாயிகளை எப்படி சிரமப்படுத்தலாம என்று யோசிக்கிறார் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

அடுத்த செய்தி”ஓரம்போ ஓரம்போ.. கத்காரி வண்டி வருது”.. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கார்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.