சென்னை: சிறந்த முதலீட்டு ஊக்குவிப்பு முகமை விருது பெற்ற தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்தின் முன்முயற்சியான வருடாந்திர முதலீட்டுக் கூட்டம் 2022ல் ஆசியா ஓசியானியா பிராந்தியத்தில் ‘சிறந்த முதலீட்டு ஊக்குவிப்பு முகமை விருது’-ஐ தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான தமிழ்நாடு வழிகாட்டி வென்றுள்ளது. மிகவும் பாராட்டத்தக்க இந்த முதலீட்டு விருதுகள் ஏஐஎம் காங்கிரசின் ஒரு முக்கியமான நிகழ்வாகும், மேலும், அவை ஏஐஎம் 2013ல் முதன்முறையாக தொடங்கப்பட்டதாகும்.இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் வாயிலாக உலகளாவிய அரங்கில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை காட்சிப்படுத்திய பெருமையை தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.