பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள போதை பொருளை ஒழிப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் பக்வந்த் மன் உடன் பேசியதாக சமீபத்தில் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்து தெரிவித்தார்.
இஸ்ரேலில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த 70-ஆவது பிரபஞ்ச அழகி போட்டியில் பட்டத்தை வென்ற ஹர்னாஸ் கவுர், பஞ்சாப் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹர்னாஸ் கவுர், 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் பட்டத்தை வென்றதற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.
பஞ்சாபிற்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என விரும்புவதாக கூறிய ஹர்னாஸ், திரைப்படங்களில் நடிப்பது குறித்து ஓர் ஆண்டுக்கு பிறகு முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.