சென்னை: நளினிக்கு ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஆளுநர் ஒப்புதல் இன்றி முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நாட்டில் எந்த ஐகோர்டிலாவது தண்டனை பெற்ற குற்றவாளிகளை ஜாமினில் விடுவித்ததற்கான தீர்ப்பு உள்ளதா? என்று நீதிபதி தெரிவித்தார். தமிழகத்தில் பரோல் தொடர்பான விதிகள் உள்ளனவா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
