நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போக்குவரத்து மற்றும் மின்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரம் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு பொது நிர்வாக பிரிவின் அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.