பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது.
தினமும் ஒரு டம்ளர் பால் உட்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது.
மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.
இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் பால் அதிகமாக குடிப்பதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இங்கே பார்த்து தெரிந்து கொள்வோம்.
- நீங்கள் அதிக பால் குடித்தால், உங்கள் செரிமானம் பல சிக்கல்களை எதிர்கொள்ளும். இதனுடன், சில நேரங்களில் வாய்வு பிரச்சனையும் நீங்கள் சந்திக்க நேரிடம்.
- பால் குடிப்பது சில நேரங்களில் அமைதியின்மை, சோர்வு மற்றும் சோம்பல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- அதிகப்படியான பால் உட்கொள்வது உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்காது, முகப்பரு பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
- ஒரு நாளில் மூன்று கிளாஸுக்கு மேல் பால் குடித்தால், உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். இது பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.