இந்தியா சமீபத்திய காலமாகவே அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவினை மேம்படுத்தி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு தான் ஐக்கிய அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது மே மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இதேபோல ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வணிகத்தினை மேற்கொள்ள ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பினை விரைவில் ஆஸ்திரேலியா வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது குறித்து, விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்?
விரைவில் சூப்பர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் வர்த்தக துறை அமைச்சர் டான் டெஹானும், இந்தியாவின் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலும் இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்கு நெருக்கமாக உள்ளதாகவும், ஆக விரைவில் இது குறித்த சாதகமான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் டான் டெஹான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பும் தீவிர ஆலோசனை
இதற்காக இரு தரப்பிலும் தீவிர வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், நாங்கள் விரைவில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒப்பந்தத்தினை எட்டுவோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2011 ல் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு பிறகு 2015ல் மீண்டும் இடை நிறுத்தப்பட்டது.
இடை நிறுத்தம்
இது டெல்லி மற்றும் கான்பெர்ராவுக்கு இடையிலான உறவு விரிசல்களுக்கு மத்தியில் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது இடை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், இது குறித்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் மீண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் விருப்பம்
ஆஸ்திரேலிய அரசின் கூற்றுப்படி, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2020ல் 24.3 பில்லியன் டாலர் மதிப்புள்ளது. இது கடந்த 2007ல் 13.6 பில்லியன் டாலராக இருந்தது.
ஆஸ்திரேலிய அரசு இந்திய சந்தையினை அணுக விரும்பும் நிலையில், அவர்களின் கவனம் விவசாய வணிகத்தில் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்திய அரசு இந்திய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தயங்குவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
மோரிசனின் திட்டம் என்ன?
மொத்தத்தில் ஆஸ்திரேலியாவில் தேர்தலுக்கான பரப்புரை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஆஸ்திரேலிய அரசு வலுவான பொருளாதாரத்தினை எட்ட போராடி வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த ஸ்காட் மோரிசனும் இது போன்ற ஒப்பந்தங்களை முன் வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இறக்குமதி
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவில் இருந்து பெட்ரோலியம் ஆயில்கள், கனிமங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள், ஜெம்ஸ் & ஜூவல்லரி, கெமிக்கல்கள், கெமிக்கல் சார்ந்த பொருட்கள், லெதர், லெதர் பொருட்கள், காலணிகள், பயண பொருட்கள், விவசாய பொருட்கள் என பலவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் என்னென்ன இறக்குமதி?
இந்தியாவில் அதிகளவில் நிலக்கரி, தங்கம், வெள்ளி, காய்கறிகள், உலர் பழங்கள், பழ வகைகள், முலாம்பழம், ஆப்டிகல், புகைப்படம், மருத்துவ சாதனங்கள் இரும்பு மற்றும் அயர்ன், கம்பளி, விலங்குகளின் முடி, குதிரை முடி, நூல் மற்றும் துணி, கனிம எரிபொருட்கள், எண்ணெய், முத்துகள், விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், பருத்தி, லெட், நிக்கல், பிளாஸ்டிக், மருத்துவ பொருட்கள், ஜிங்க், தானியங்கள், கால் நடை தீவனம் என ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கின்றது.
Australia will soon finalizing free trade deal with indIa
Australia will soon finalizing free trade deal with indIa/நெருங்கி வரும் ஆஸ்திரேலியா.. FTA குறித்து விரைவில் அறிவிப்பு.. இந்தியாவுக்கு பலன் உண்டா?