போபால்: பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்தியபிரதேசத்தில் கட்டப்பட்ட 5.21 லட்சம் வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கை எட்ட பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் (பிஎம்ஏஒய்) நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டி முடிக்கப்பட்ட 5.21 லட்சம் வீடுகள் நேற்று பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சத்தார்பூரில் இருந்தபடி அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வீடுகளை திறந்து வைத்த பின்னர் பேசியதாவது:
ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் இதுவரை 2.5 கோடிவீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன.
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் (ஜல் ஜீவன்) திட்டத்தின் கீழ், இதுவரை 6 கோடி குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேகுழாய் இணைப்பு வழங்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.-பிடிஐ