புதுடில்லி: நம் முன் உள்ள இலக்குகளை எட்டுவதற்கு, உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாநாடு நடந்தது. இலங்கை நடத்திய மாநாட்டில், வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இணைப்பு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பாலமாக வங்காள விரிகுடாவை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த 1997 ம்ஆண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதித்தது போல், நம்முன் உள்ள இலக்குகளை எட்டுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிம்ஸ்டெக் நாடுகளை கேட்டு கொள்கிறேன். புதிய உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும்.
ஐரோப்பாவில் சமீபத்தில் நடப்புகள், ஸ்திரத்தன்மையில் கேள்வியை எழுப்பி உள்ளது. இதன் அடிப்படையில் பிராந்திய ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாளந்தா சர்வதேச பல்கலைகழகம் வழங்கும் பிம்ஸ்டெக் உதவித்தொகை திட்டத்தை விரிவாக்கவும், விரிவுபடுத்தவும் பணியாற்றி வருகிறோம். கிரிமினல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement