பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்றும் £50 நோட்டுகள் செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) அறிவித்துள்ளது.
ஜே.எம்.டபிள்யூ டர்னர் மற்றும் கணிதவியலாளர் ஆலன் டூரிங் ஆகியோரைக் கொண்ட காகிதத் தாள்களுக்குப் பதிலாக நீடித்து நிலைத்திருக்கும் பிளாஸ்டிக் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவர பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், தங்களின் காகித £20 மற்றும் £50 நோட்டுகளை செலவழிக்க அல்லது வங்கியில் வைப்பிலிடுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
17 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள காகித நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல், பிரித்தானிய வங்கிக் கணக்கு உள்ளவர்கள் தங்கள் கணக்கில் காகித நோட்டுகளை வைப்பிலிட முடியும்.
சில தபால் நிலையங்கள் பழைய நோட்டுகளை பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணமாகவோ அல்லது தபால் சேவை மூலம் அணுகப்பட்ட கணக்கில் வைப்புத்தொகையாகவோ ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைமை காசாளர் சாரா ஜோன் கருத்து வெளியிடுகையில்,
“நோட்டுகள் காகிதத்தில் இருந்து பிளாஸ்டிக்குக்கு மாற்றப்படுகின்றன. “இந்த வடிவமைப்புகள் போலி நோட்டுகளை உருவாக்குவது மிகவும் கடினம், அதே சமயம் அதிக நீடித்திருக்கும்” என்று கூறியுள்ளார்.