முதல் மற்றும் இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இலங்கையில், சிறுவர்கள் தவிர, ஏனையவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் மாத்திரமே வழங்கப்படுகின்றது
பொதுவாக சில நாடுகளுக்கு செல்வதாயின் பைஸர் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனால், இவ்வாறான சந்தர்ப்பம் வெளிநாடு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.