மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு! மத்திய கேபினட் கூட்டத்தில் ஒப்புதல்…

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி உயர்த்த ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப் பட்டது. அத்துடன், மத்தியஅரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளத.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி  உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக அகவிலைப்படி உயர்வு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டு மத்திய அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கியது. அதைத் தொடர்ந்து, தறபோது மேலும் 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அகவிலைப்படியானது 31 சதவிகிதமாக உயர்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.