புதுடெல்லி,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் பலன் அடைவர்.
நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தி வழங்கப்படும். நாட்டில் தற்போது எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழலில், அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதாக அமைந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக அகவிலைப்படி உயர்வு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டு மத்திய அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கியது.