தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் கைதேர்ந்தவர் ஆன பிரசாந்த் கிஷோர், வருகின்ற மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்ற உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றாக பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள மாநில கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன.
தேசிய காங்கிரஸ் கட்சி வலுவிழந்து உள்ளநிலையில், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தனது தலைமையில் ஒரு அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், இனி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிறகு, இனி வேறு எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கப் போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
மேலும், அவர் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து தனது முடிவை தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு காங்கிரஸில் இருந்து கொண்டே தேர்தல் வியூகங்களை வகுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தற்போது பேச்சுக்கள் அடிபட்டு உள்ளன.