புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தொடங்கிய மாஜா தளத்தில் அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வகையில் ரகுமான் இசையமைத்து தயாரித்து வெளியிட்ட இசை ஆல்பம் தான் ‘மூப்பில்லா தமிழே தாயே’ தமிழின் தொன்மையையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக இப்பாடல் உருவாகியுள்ளது.
இப்பாடலுக்கு பாடலாசிரியர் தாமரை வரிகளை எழுதியுள்ளார். மார்ச் 24ஆம் தேதி அன்று துபாய் எக்ஸ்போவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காட்சிப்படுத்தப்பட்ட பாடல் கடந்த வெள்ளிக்கிழமை மாஜாவின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இது குறித்து ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ என பதிவிட்டுட்டார்.
ஆனந்த் மகேந்திரா ட்வீட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக ஏ ஆர் ரகுமான் நள்ளிரவில் தனது ட்வீட்டர் பக்கத்தில், மிக்க மகிழ்ச்சி! காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று, ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக ‘மூப்பில்லா தமிழ்’ இருக்கிறது என்றும் சொல்கிறோம்! மிக்க நன்றி! என டுவிட் செய்துள்ளார்.
மிக்க மகிழ்ச்சி!
காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று,
ஒட்டுமொத்த உலகத்தையும்
முன்னெடுத்துச் செல்லும்
வாகனமாக
‘மூப்பில்லா தமிழ்’ இருக்கிறது
என்றும் சொல்கிறோம்! ☺மிக்க நன்றி! https://t.co/IWx7VqvOUl
— A.R.Rahman (@arrahman) March 29, 2022