மோடியின் தினசரி வேலையில் இடம் பிடித்தவை என்னென்ன?- பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம்

உத்தரபிரதேச உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலின்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகள் உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் விலை உயர்த்தப்பட்டது. 2-வது வாரமாக தொடர்ந்து விலை உயர்வு இருந்து வருகிறது.

விலை உயர்வை  அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.  பல்வேறு தொழிற்சங்கங்கள் கடந்த இரண்டு நாட்களாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கு முன்னணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில் பிரதமரின் தினசரி வேலை பட்டியலில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகள் இடம் பெற்றிருக்கும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘RozSubahKiBaat’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ‘‘பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை எவ்வளவு உயர்த்தலாம், பொதுமக்களின் செலவினங்கள் குறித்த விவாதத்தை எப்படி நிறுத்துவது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய வெற்றுக் கனவுகளை எப்படிக் காட்டுவது, எப்படி பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, விவசாயிகளை மேலும் ஆதரவற்றவர்களாக ஆக்குவது எப்படி என்பது தினசரி வேலை பட்டியலில் இடம் பெற்றிருக்கும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.