மத்திய பிரதேசத்தில் இரண்டு தலை மூன்று கைகளுடன் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்திலுள்ள ஜஓரா பகுதியைச் சேர்ந்த ஷாஹின் என்ற பெண் கருத்தரிப்புக்குப்பின் ஸ்கேன் செய்துபார்த்தபோது இரட்டை குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே ரத்லாம் மாவட்ட மருத்துவமனையில் திங்கட்கிழமை மாலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுக்கு இரண்டு தலை மூன்று கைகளுடன் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஷாஹினின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவர் ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் குழந்தை மட்டும் மகாராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தை அறுவைசிகிச்சை நிபுணர் ’’ப்ரிஜேஷ் லஹோட்டி கூறுகையில், இதை மருத்துவ முறைப்படி dicephalic parapagus என்கிறனர். அதாவது ஒரு உடலில் இரண்டு தலைகள் அருகருகே இருக்கும். இதுபோன்ற நிலை மிகவும் அரிதானதுதான் என்றாலும், இப்படி பிறக்கும் குழந்தை பிழைக்கும் என்பது நிச்சயமற்றது என்பதால் ஆரம்ப நாட்களில் மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இந்த குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்வது குறித்து இதுவரை திட்டமிடவில்லை’’ என்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM