ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலால் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள Oktyabrsky என்ற கிராம பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ முகாம் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனம் TASS தெரிவித்துள்ளது.
இந்த ஷெல் தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் சரியாக அந்த பகுதியில் என்ன நடந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
TASS reports that a shell hit a military camp in #Belgorod Region. According to the agency, four servicemen were wounded. Local authorities report no civilian casualties.
— NEXTA (@nexta_tv) March 29, 2022
இந்த நிலையில் ரஷ்யாவின் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வரை காயமடைந்து இருப்பதாகவும், உள்ளுர் அதிகாரிகளின் தகவலின் படி பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் ராணுவ முகாம்மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மனித காரணிகளால் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பெல்கோரோட் நகர மக்கள் Oktyabrsky கிராமத்திற்கு அருகில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பெல்கோரோட் நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.