உக்ரைனில் மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தயார்படுத்தலுக்காகவே ரஷ்ய படைபிரிவுகள் பெலாரஸ் திரும்புவதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டொனெஸ்ட்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் பெரும் இழப்பைச் சந்தித்த படைப் பிரிவுகள் ரஷ்யாவிற்கும் பெலாரஸுக்கும் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதேவேளை ரஷ்யா உள்ளூர்வாசிகளுக்கு எதிரான ‘சட்டவிரோத செயல்களை’ தொடர்கிறது என்று உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
உக்ரைன்,தென்கிழக்கின் சபோரிஜியா மற்றும் தெற்கில் கெர்சனில் உள்ள உள்ளூர் மக்களுக்கு எதிராக ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து சட்டவிரோத செயல்களை செய்து வருவதாக உக்ரேனிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ரஷ்யா தொடர்ந்து படைகளை அனுப்புகிறது
ரஷ்யப் படைகள் உள்ளூர்வாசிகளின் வீடுகளைத் தொடர்ந்து சோதனை செய்கின்றன, உக்ரேனிய சார்பு ஆர்வலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை தடுத்து வைத்துள்ளன என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களில் கியேவைச் சுற்றியுள்ள இராணுவ நடவடிக்கைகளை கடுமையாக குறைக்க ரஷ்யா உறுதியளித்ததை அடுத்து இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது